மேல் மாகாணத்தில் கொரோனா பரவக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது -ஹரித அளுத்கே

d2749875 64a639b3 dr haritha aluthge 850x460 acf cropped
d2749875 64a639b3 dr haritha aluthge 850x460 acf cropped

குறைந்த ஆபத்து நிறைந்த பகுதியான மேல் மாகாணத்தில் கொரோனா தொற்று பரவக்கூடிய சந்தர்ப்பம் அதிகம் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே, மேல் மாகாணத்தில் வைரஸ் அதிகமாக பரவினாலும் புதிய நோயாளிகள் மற்ற பகுதிகளிலும் பரவலாக அடையாளம் காணப்படுவதாக குறிப்பிட்டார்.

அந்தவகையில் கண்டி, பண்டாரகம, கிழக்கு மாகாணம், புத்தளம் மற்றும் காலி போன்ற பிற பகுதிகளிலிருந்து கண்டறியப்பட்ட நோயாளிகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள வைத்தியர் ஹரித அளுத்கே, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா தொற்று இலங்கையில் பரவுவது மிகவும் விரைவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.