சின்ன பையனுடன் காதலில் அனுஷ்கா!

201906282317497762 Actress Anushka Description SECVPF
201906282317497762 Actress Anushka Description SECVPF

அனுஷ்கா ஒரு வில்லங்கமான காதல் கதை கொண்ட படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். அந்த படத்திற்கு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.

பாகுபலி 2 படத்திற்கு பிறகு அனுஷ்காவின் கெரியர் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அவர் நடித்த சைலன்ஸ் படம் ஓடிடியில் வெளியாகி படுதோல்வி அடைந்தது. இது எல்லாம் ஒரு படமா என்று விமர்சகர்களும், சினிமா ரசிகர்களும் திட்டித் தீர்த்தார்கள்.

சைலன்ஸ் பட தோல்வியால் அனுஷ்கா வேதனையில் இருந்தார். மேலும் இனிமேல் கதையை தேர்வு செய்யும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். இந்நிலையில் தான் அவர் நடிக்கவிருக்கும் புதுப்படம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

அதாவது 40 வயது பெண்ணுக்கும், 20களில் இருக்கும் ஆணுக்கும் இடையேயான காதல் பற்றிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் அனுஷ்கா. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி நடிக்கிறாராம்.

நவீன் அனுஷ்காவை விட சிறியவர் ஆவார். நவீன், அனுஷ்கா சேர்ந்து நடிக்கும் படத்திற்கு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்று பெயர் வைத்துள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த படத்தை ரா ரா கிருஷ்ணய்யா படம் புகழ் மகேஷ் இயக்கவிருக்கிறாராம். படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

நவீன், அனுஷ்கா படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் துவங்குமாம். வெளிநாட்டுக்கு சென்று உடல் எடையை வெகுவாக குறைத்துவிட்டு வந்த அனுஷ்கா தற்போது மீண்டும் குண்டாகியுள்ளார். அவர் குண்டாக அழகாக இருக்கும் புகைப்படம் அண்மையில் வெளியாகி வைரலானது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ, ஸ்வீட்டி ரொம்ப ஸ்வீட் என்றார்கள். மற்றவர்களோ, என்னது இது அனுஷ்கா இப்படி குண்டாக இருக்கிறாரே என்று கூறுகிறார்கள்.