பாரதி கண்ணம்மா தொடரில் திடீர் திருப்பம் – மீண்டும் பாரதியுடன் இணைவாரா கண்ணம்மா

பாரதி கண்ணம்மா தொலைக்காட்சித் தொடர்
பாரதி கண்ணம்மா தொலைக்காட்சித் தொடர்

விஜய் தொலைக்காட்சி தற்போது ரிஆர்பி ரேட்டிங்-ல் உச்சத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் பாரதி கண்ணம்மா தொடர்.

பல திடுக்கிடும் திருப்பங்களை கொண்ட பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது கதாநாயகி மற்றும் கதாநாயகன் இருவருமே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

சமீபத்திய பாகத்தில் கதாநாயகனிடம் வளர்ந்து வரும் குழந்தை ஹேமாவை, சில நபர்களால் கடத்தப்படுகிறார்.

தனது குழந்தை காணாமல்ப்போனதை அறிந்த கண்ணம்மா, தனது துணிச்சலான செயலால், தனது மகளை கண்டுபிடிக்கிறார்.

இதனால் மனம் உருகி போன பாரதி, கண்ணம்மாவிற்கு நன்றி தெரிவிக்க, அவர் வீட்டுக்கு செல்கிறார்.

இதனால் மீண்டும் இருவரும் இணைவார்களா? அல்லது இதுவும் சண்டையில் தான் முடியுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.