யாரும் பார்க்க முடியாத இடத்தில் பச்சை குத்திய சமந்தா!

samayam tamil 1 3
samayam tamil 1 3

சமந்தா தன் உடம்பில் யாரும் பார்க்க முடியாத இடத்தில் நாக சைதன்யாவின் பெயரை பச்சை குத்தியது பற்றி ரசிகர்கள் தற்போது பேசுகிறார்கள்.

சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் நான்காவது திருமண நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு அக்டோபர் 2ம் தேதி தாங்கள் பிரிவதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர்.

கணவரை பிரிந்த சமந்தா தொடர்ந்து புதுப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். முன்னதாக அவர் நாக சைதன்யா மீது கொண்ட காதலால் தன் உடம்பில் யாரும் பார்க்க முடியாத இடத்தில் அவரின் பெயரை பச்சை குத்தினார். அதை பல நாட்கள் ரகசியமாக வைத்திருந்த சமந்தா ஒரு நாள் அனைவருக்கும் காட்டினார்.

மேலும் நாக சைதன்யாவுடன் சேர்ந்து நடித்த ஏ மாய சேசாவே படம் தன் வாழ்வில் முக்கியமானது என்பதால் அதை வை.எம்.சி என்று தன் முதுகு பகுதியில் பச்சை குத்தினார். சமந்தா தற்போது நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா அந்த இரண்டு பச்சைகுத்திய படங்களையும் அழித்துவிடுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. நாக சைதன்யாவின் பெயரை ஆசை ஆசையாய் பச்சை குத்தினாரே, தற்போது அதை அழிக்க வேண்டுமானால் எவ்வளவு வேதனையாக இருக்கும் என்று சமந்தாவின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதற்கிடையே சமந்தாவுக்கும் ஆடை வடிவமைப்பாளரான ப்ரீத்தமுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக பேச்சு கிளம்பியது. இது குறித்து அறிந்த ப்ரீத்தமோ, சமந்தா எனக்கு அக்கா போன்றவர். இது நாக சைதன்யாவுக்கும் தெரியும். அப்படி இருந்தும் அவர் அமைதியாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.