நடிகர் விஜய் சேதுபதி மீது பெங்களூரு விமான நிலையத்தில் தாக்குதல்!

NTLRG 20211103201233030638
NTLRG 20211103201233030638

படப்பிடிப்புக்காக பெங்களூரு விமான நிலையம் வந்திறங்கிய நடிகர் விஜய் சேதுபதி மீது மர்ம நபர் திடீர் தாக்குதல் நடத்தினர்.

பெங்களூரு விமான நிலையத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி வந்தார். அப்போது திடீரென மர்ம நபர் விஜய் சேதுபதி மீது திடீர் பாய்ந்து தாக்கினான். இதில் அவர் நிலை தடுமாறினார். உடன் பாதுாப்புக்கு வந்தவர்கள் அவரை மீட்டனர்.

இது தொடர்பாக நடத்த விசாரணையில் படப்பிடிப்பில் பங்றே்பதற்காக பெங்களூரு வந்தார் விஜய் சேதுபதி. விமான நிலையத்திற்கு வந்திறங்கிய போது வெள்ளை சட்டை, கருப்பு பேன்ட் அணிந்திருந்த மர்ம நபர் ஆவேசத்துடன் விஜய் சேதுபதி மீது பாய்ந்து பின்னால் முதுகில் எட்டி உதைத்தார். இதில் விஜய் சேதுபதி நிலை தடுமாறினார். இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. உடன் பாதுகாப்புக்கு வந்தவர்கள் அவரை காப்பாற்றினர்.

தமிழ் நடிகர் என்பதால் அவர் தாக்கப்பட்டாரா… அல்லது வேறு ஏதாவது ஒரு காரணமா என்பது இன்னும் தெரியவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக விஜய் சேதுபதி தரப்பில் விசாரித்தபோது, எதுவும் பேச விரும்பவில்லை” என்று கூறினார். தாக்கிய மர்ம நபரை விமான நிலையத் தொழில் பாதுகாப்புப் படையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதன் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருவதால், விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் எனத் தெரிகிறது.