திருமணத்திற்கு தயாராகும் கங்கனா – காதலரை விரைவில் அறிவிக்கிறார்!

Gov 1 1
Gov 1 1

ஜெயம் ரவி நடித்த தாம்தூம் என்ற படத்தில் தமிழில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். ஹிந்தியில் முன்னணி நடிகையாக திகழும் இவர் சமீபத்தில் ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவி படத்தில் நடித்தார். சில தினங்களுக்கு முன் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

இந்நிலையில் திருமணம் தொடர்பாக கங்கனா அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛நிச்சயமாக திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொள்வேன். அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு மனைவியாகவும், தாயாகவும் இருப்பேன். திருமணம் செய்யும் எண்ணத்தில் உள்ளேன் என தெரிவித்துள்ளார். மேலும் தான் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவர் யார் என்பதை விரைவில் தெரிவிப்பேன்” என கூறியுள்ளார்.