எனக்கு கல்யாணமா? உண்மையை உடைத்த சாய் பல்லவி

22 6270e10f3346d
22 6270e10f3346d

நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற ரோலில் நடித்ததன் மூலமாக புகழின் உச்சிக்கே சென்றவர். சாய் பல்லவி. அவர் அதற்கு பிறகு தெலுங்கில் அதிகம் படங்களில் நடித்து அங்கு டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார்.

அவருக்கு இருக்கும் மாஸ் ரசிகர் கூட்டத்தை பார்த்து மற்ற நடிகர்களே அதிகம் ஷாக் ஆவார்கள். அந்த அளவுக்கு சாய் பல்லவி பட விழாக்களில் கலந்துகொண்டால் ரெஸ்பான்ஸ் இருக்கும்.

சாய் பல்லவி சமீப காலமாக எந்த படங்களையும் ஒப்புக்கொள்வதில்லை, அதனால் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என கடந்த சில தினங்களாக தகவல் பரவி வருகிறது.

இதற்க்கு விளக்கம் அளித்து இருக்கும் சாய் பல்லவி தனக்கு திருமணம் முடிவாகவில்லை என்றும் நல்ல கதைக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

சாய் பல்லவி நடித்தால் படம் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள். அதற்காகவே நான் நல்ல கதை வந்தால் தான் ஏற்றுக்கொள்வேன் என சாய் பல்லவி கூறி இருக்கிறார்.