சூர்யா படத்தில் வக்கீலாக ஜோதிகா!

1583304873 w
1583304873 w

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா கதாநாயகியாக நடித்து வரும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் முதல் பார்வை விளம்பரம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கும் முதல் பார்வை விளம்பரத்தில் வக்கீல் தோற்றத்தில் ஜோதிகா காட்சிதருவதையடுத்து வக்கீலாக இப்படத்தில் நடிப்பது வெளிப்பட்டுள்ளது.

ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கும் இப்படத்தில் ஜோதிகா கதாநாயகியாகவும், இயக்குநர் பார்த்தீபன், பாக்கியராஜ், பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றது.

இப்படம் மார்ச்-27 இல் வெளியிடப்படவுள்ளது.