ஹரியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அருவா!

531969
531969

இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கு அருவா என பெயரிடப்பட்டுள்ளது. சூர்யாவின் 39 ஆவது படத்தை ஹரி இயக்கப்போகின்றார். ஹரி-சூர்யா இணையும் 6 வது படமாக அருவா அமைகிறது.

இயக்குநர் ஹரியின் 16 வது படமாக உருவாகும் அருவா படத்தை ஸ்ருடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யா-ஹரி கூட்டணியில் முதல் முறையாக இசையமைப்பாளர் டீ.இமான் இப்படத்தில் இணைகிறார்.

வரும் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை தொடங்கி ஒரே கட்டமாக நடத்தி வரும் தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக சூர்யா தனது 39 வது படத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக இருந்த நிலையில் ரஜினியின் படத்தை சிவா இயக்கிவருவதால் ஹரியுடன் இணைந்துள்ளார் சூர்யா. அதைவிட இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.