பிள்ளைகளின் படம் வெளியிட்ட நடிகை

i3 3 5
i3 3 5

ரோஜா, ஜென்டில்மேன் படங்களில் நடித்து பிரபலமானவர் மதுபாலா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் நடித்து வந்தார். திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த மதுபாலா, வாயை மூடி பேசவும் படம் மூலம் மீண்டும் வந்தவர்.

தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் தலைவி படத்தில் எம்ஜிஆரின் மனைவி ஜானகியாக நடிக்கிறார்.

இந்நிலையில், இணையதளத்தில் தனது மகளான அமெயா, கையா ஆகியோருடன் தான் எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார் மதுபாலா.

அந்த படங்களைப்பார்த்து விட்டு, உங்கள் மகள்களும் சினிமாவில் நடிக்க வருகிறார்களா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.