83 – ஒ.டி.டி.யில் வெளியாகாது

i3 6
i3 6

1983ல் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வென்றது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வின்போது அணி கேப்டனாக கபில்தேவ் இருந்தார். இந்த வெற்றிக் கதையைச் சொல்லும் படம் ’83 .

இதில் ரன்வீர் சிங், இந்திய அணியின் அன்றைய கேப்டன் கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடித்துள்ளார். இப்படத்தை கபீர் கான் இயக்கியுள்ளார். ரன்வீர் சிங்குடன் இணைந்து ரிலையன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் கடும் ஊரடங்கு அமுலில் உள்ளதால், படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ’83’ திரைப்படத்தை ஒரு பெரிய ஆன்லைன் நிறுவனம் 143 கோடி ரூபாய்க்கு வாங்கி விட்டதாகவும் விரைவில் ’83’ படம் ஆன்லைனில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இதற்கு படத்தை தயாரித்துள்ள ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி சிபாசிஷ் சர்கார் கூறியதாவது:

83 குறித்து வரும் தகவல்களில் துளியும் உண்மையில்லை. பெரிய திரை அனுபவத்துக்காகவே ’83’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு தயாரிப்பாளர்களுக்கோ, இயக்குநருக்கோ இப்படத்தை சிறிய திரைக்குக் கொண்டு செல்லும் எண்ணம் இல்லை. ஒருவேளை 6 மாதங்களுக்குப் பிறகும் இயல்புநிலை திரும்புவதற்கு தாமதமானாலோ, நிலைமை இன்னும் மோசமடைந்தாலோ நாங்கள் அதுகுறித்து யோசிப்போம். அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்குள் நிலமை சீராகும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.