ஹிந்திக்கு போகும் ஓ மை கடவுளே

i3 1 2
i3 1 2

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் ஓ மை கடவுளே.

காதல் உடன் பேண்டசி கலந்து வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பும், வசூலும் கிடைத்து. இதனால் இப்படத்தை பிற மொழிகளிலும் ரீ-மேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்தவகையில் தெலுங்கு, ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் பணிகள் நடப்பதாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். மேலும் தமிழில் ஒரு படம் இயக்கவும் கதை எழுதி வருவதாக அவர் கூறியுள்ளார்.