விஜய், அனிருத்திற்கு நன்றி : லாரன்ஸ்

i3 3 2
i3 3 2

மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி மற்றும் வாத்தி கமிங் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளன. இந்த பாடல்களுக்கு நடனமாடியும், பாடியும் பலர் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

இரண்டு கைகளையும் இழந்த மாற்று திறனாளியான் தன்சன் எனும் இளைஞர் வாத்தி கமிங் பாடலை வாசித்து வீடியோ வெளியிட்டார். இவர் நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் மாற்றுத்திறனாளி அமைப்பை சேர்ந்தவர்.

தன்சனின் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “இவர் தன்சென். என்னுடைய மாற்று திறனாளிகள் குரூப்பில் இருப்பவர். அவர் என்னுடைய காஞ்சனா படத்தில் நடித்துள்ளார். அவர் லாக்டவுன் நேரத்தில் மூன்று நாட்கள் பயிற்சி செய்து வாத்தி கமிங் பாடலை வாசித்துள்ளார். அவரது ஆசை அனிருத் சார் இசையில் ஒரு சிறிய பகுதியாவது வாசிக்கவேண்டும் என்பது தான். அதை விஜய் முன்னிலையில் வாசிக்க வேண்டும். அவரது கனவு நிஜமாகும் என நம்புகிறேன்” என லாரன்ஸ் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து லாரன்சை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய விஜய், கொரோனா ஊரடங்கு முடிந்ததும் தன்சனை சந்திப்பதாக உறுதியளித்துள்ளார். அதேபோல் அனிருத்தும் அவரது இசைக்குழுவில் தன்சனை சேர்த்துக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை டிவிட்டரில் பகிர்ந்துகொள்ள லாரன்ஸ், “நண்பன் விஜய் மற்றும் அனிருத் சாருக்கு நன்றி”, என தெரிவித்துள்ளார்.