அன்னையர் தினத்தில் கனிகாவின் குறும்படம்

i3 4 2
i3 4 2

பைவ் ஸ்டார், வரலாறு போன்ற படங்களில் நடித்தவர் நடிகை கனிகா. இப்போதும் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் முதன்முறையாக குறும்படம் ஒன்றை இயக்கி இயக்குனராக களமிறங்கி உள்ளார்.

மா என பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படம் தாய்மையை போற்றும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. அன்னை தான் நமக்கு எல்லாமும் தந்தது. அவர்கள் எதிர்பார்ப்பது அவர்கள் மீது நாம் செலுத்தும் அளவுக்கடந்த அன்பும், அக்கறையும் மட்டுமே. இதை விட அவர்களுக்கு வேறு சந்தோஷம் எதுவும் இருக்க முடியாது என்பதை உணர்த்தும் விதமாக இந்த குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அன்னையர் தினமான இன்று மம்முட்டி, மஞ்சுவாரியர், விஜய் சேதுபதி ஆகியோர் இதை வெளியிட்டுள்ளனர். குறும்படம் முடிவில் உங்கள் அன்னையை நீங்கள் கட்டிப்பிடித்து எவ்வளவு நாளாகிவிட்டது என கனிகா கேட்கிறார். இதை இவரின் கணவர் சியாம் தயாரித்துள்ளார்.

குறும்படம் வீடியோவை காண அருகில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் : https://www.youtube.com/watch?v=BffTVbJkMZM&feature=youtu.be