சிறு பட்ஜெட் படங்களுக்கு மானியம்

i3 3
i3 3

தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) சார்பில் தலைவர் ஜாகுவார் தங்கம் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்தனர்.

அப்போது அவர்கள், திரைப்பட படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரியும், சிறு படங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 10 லட்சம் ரூபாய் மானியத்தை உடனடியாக வழங்க கோரியும், சிறு படங்களுக்கான மானியம் கொடுக்க புளூரே டிஸ்க், ஹார்ட் டிஸ்க், கட்டணம் செலுத்தும் கால அவகாச திகதியை நீட்டித்து அறிவிக்க வேண்டும் என்று கேட்டும், கோரிக்கை மனு கொடுத்தனர். அமைச்சரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.