சாஹோ இயக்குனரின் நிச்சயதார்த்தம்

i3 13 2
i3 13 2

பாகுபலி போன்ற பிரமாண்டமான படத்தில் மிகப்பெரிய இயக்குனரின் டைரக்சனில் நடித்த பிரபாஸ், அடுத்ததாக தனது படத்தை இயக்கும் வாய்ப்பை ஏற்கனவே ஒரு படம் இயக்கி தோல்வி கண்ட ஒரு இயக்குனருக்கு கொடுப்பார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்தவகையில் பிரபாஸ் நடித்த சாஹோ படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றவர் இயக்குனர் சுஜீத். அடுத்ததாக சிரஞ்சீவி நடிப்பில் மோகன்லால் நடித்த லூசிபர் என்கிற மலையாள படத்தை ரீமேக் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார்.

சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்துவிட்ட கையோடு அடுத்ததாக திருமண வாழக்கையில் அடியெடுத்து வைக்கிறார் சுஜீத் மணப்பெண் பெயர் பிரவல்லிகா பல் மருத்துவரான இவர் டிக்டாக் பாடல் வீடியோக்கள் மூலம் பிரபலமானவரும் கூட.

இவர்கள் இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று ஐதராபாத்தில் குறைந்த அளவிலான நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் மிக எளிமையாக நடைபெற்றது. .திருமண தேதி ஊரடங்கு நீடிக்கும் நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.