இளம்வயது நினைவுகளில் நெகிழ்ந்த ஐஸ்வர்யா

i3 9 4
i3 9 4

கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல கன்னட நடிகரும் நடிகை மேக்னா ராஜின் கணவருமான சிரஞ்சீவி சார்ஜா, திடீரென மரணமடைந்தது கன்னட திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாற்பது வயதை கூட தொடாத இவர், நடிகர் அர்ஜுனின் நெருங்கிய உறவினர் என்பது பலருக்கு தெரிந்திருக்கும்.

சிரஞ்சீவி சார்ஜாவை ஒரு நடிகராக மாற்றியதில் அர்ஜுனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.. இவரது மறைவுக்கு அர்ஜுன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் பெங்களூருக்கு நேரிலேயே சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் அர்ஜுனின் மகளும் பட்டத்து யானை பட கதாநாயகியுமான ஐஸ்வர்யா, சிரஞ்சீவி சார்ஜாவுடன் சிறுவயதில் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு நெகிழ்ச்சியுடன் அவரை நினைவு கூர்ந்துள்ளார்.

அந்த புகைப்படங்களை பார்க்கும்போது அர்ஜுன் வீட்டில் சிறுவயது முதலே சிரஞ்சீவி ஷார்ஜா எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருந்தார் என்பதும் தெரிகிறது.