பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ரித்திகா சிங்!

15865vyp Ritika Singh
15865vyp Ritika Singh

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்து வெளிவந்த இறுதி சுற்று படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரித்திகா சிங்.

இதன்பின் விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸின் சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

மற்றும் சமீபத்தில் அசோக் செல்வன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே எனும் படத்திலும் நடித்து பிரபலமானார் ரித்திகா.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படத்தின் கதாநாயகியாக தேர்வாகியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.