மேற்கிந்திய தீவுகள் 02 விக்கட்டுக்களை இழந்து 10 ஓட்டங்கள்!

images 23
images 23

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் சீரற்ற காரணமாக தாமதமடைந்துள்ளது.

மென்செஸ்டர், எமிரேட்ஸ் ஓலட் ட்ரபேட் விளையாட்டு திடலில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, சற்று முன்னர்வரை 02 விக்கட்டுக்களை இழந்து 10 ஓட்டங்களை பெற்ற நிலையில் உள்ளது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 369 ஓட்டங்களைப் பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களை பெற்றது.

பின்னர், தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 2 விக்கட்டுக்களை இழந்து 226 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டுமானால், 389 ஓட்டங்களை பெற வேண்டியமை குறிப்பிடத்தக்கது.