சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகாவிற்கு பதிலகா இந்த நடிகையாம்!

202004301734348527 Raghava Lawrences mass character in Chandramukhi 2 SECVPF
202004301734348527 Raghava Lawrences mass character in Chandramukhi 2 SECVPF

பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் சந்திரமுகி.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஜோதிகா, நயன்தாரா, மாளவிகா, பிரபு, வினித், வடிவேலு என பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

இந்த ஒரு படம் தமிழ் திரையுலகில் யாரும் கண்டிராத அளவுக்கு அதிகமான வசூலை செய்து சாதனை படைத்தது.

அதுமட்டுமல்லாமல் இப்படம் ரஜினிக்கு ஒரு மாபெரும் திருப்பு முனையை திரையுலகில் அமைத்து கொடுத்தது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக போவதாக தகவல்கள் வெளிவந்திருந்தது.

மேலும் இப்படத்தில் ரஜினிக்கு பதிலாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க போவதாக தெரிவித்திருந்தார்கள்.

மேலும் கதாநாயகியாக ஜோதிகா கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்க வைக்க படகுழு பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருந்தது.

ஆனால் தற்போது ஜோதிகாவின் கதாநாயகி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் இந்த படத்தை பற்றி கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.