கார்த்தியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு

wp7101897
wp7101897

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது.

குறிப்பாக சென்ற வருடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த கைதி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது.

அதனை தொடர்ந்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

மேலும் வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் பெரிய பட்ஜெட்டில் உருவாகுவதால் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள திரைப்படமும் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாகும்.

இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.