இதுதான் என் காதல் கதை – ராணா

pic 1
pic 1

தெலுங்கு சினிமாவில் பல நடிகர்களுக்கு திருமணம் நடந்தது திருமணமாகாமல் இருந்தவர் ராணா. இவருக்கு எப்போது தான் திருமணம் என்று தெலுங்கு சினிமா ரசிகர்கள் தாண்டி தமிழ், ஹிந்தி சினிமா ரசிகர்களும் கேட்க ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில் தான் நடிகர் ராணாவிற்கு மிஹீகா பஜாஜ் என்பவருடன் காதல் ஏற்பட இருவருக்கும் ஆகஸ்ட் 8ம் திகதி ராமநாயுடு ஸ்டூடியோஸில் திருமணம் நடந்தது.

மனைவி மீது எப்படி காதல் ஏற்பட்டது என ஒரு பேட்டியில் ராணா கூறியுள்ளார். அதில் அவர், அவரை எனக்கு சிறு வயதில் இருந்து தெரியும், என் தங்கையுடன் பள்ளிக்கு செல்வார்.

அவர்கள் திடீரென மும்பைக்கு சென்றுவிட்டார்கள். இந்த ஊரடங்கு காலத்தில் தான் நான் அவரிடம் மீண்டும் பேசினேன். இருவருக்கும் இடையே காதல் மலர, உடனே வீட்டில் கூறி திருமணம் செய்துகொண்டோம் என கூறியுள்ளார்.