நயனுக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்து ரசிகர்களை உற்சாகப் படுத்திய விக்னேஷ் சிவன்!

20fdb50c05d3e8e15bece421319bb8df
20fdb50c05d3e8e15bece421319bb8df

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் முதல் படம் ‘நெற்றிக்கண்’. அவரின் காதலியான நயன்தாரா தான் இப்படத்தின் நாயகியாக நடித்துவருகின்றார் . ‘ மிலிந்த் ராவ் இப்படத்தை இயக்குகிறார்.

இன்று நயன்தாராவின் பிறந்தநாள் என்பதால், அவருக்கு பிறந்தநாள் பரிசாக ‘நெற்றிக்கண்’ படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். கண் பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ள நயன்தாரா, ஒரு குட்டிக் கதை சொல்வது போல் அமைந்துள்ள இந்த டீசர், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

திரில்லர் படமான இதில் அஜ்மல் வில்லனாக நடித்துள்ளார். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இப்படத்தை அடுத்தாண்டு வெளியிட உள்ளனர்