கண்டி டஸ்கர் அணியில் இணையும் இந்தியாவின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்!

201811111000435608 1 munafpatel001 s. L styvpf
201811111000435608 1 munafpatel001 s. L styvpf

லங்கா பிரீமியர் லீக் தொடரின் கண்டி டஸ்கர் அணிக்காக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான முனாப் பட்டேல் விளையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து அணிகள் பங்கு பற்றும் குறித்த லீக் தொடரில் கண்டி டஸ்கர் அணி பலம் வாய்ந்த ஒன்றாக விளங்குகின்றது.

இந்நிலையில், இர்பான் பதானையடுத்து கண்டி டஸ்கர் அணியில் முனாப் பட்டேல் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

கண்டி டஸ்கர் அணியில் கிறிஸ் கெய்ல், ரஹமத்துல்லா,வஹாப் றியாஸ், நவீன் உல் ஹக் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.