இன்று பணவரவுள்ள ராசிக்காரர் நீங்களா?

Rasi palan new 27 324x160 1
Rasi palan new 27 324x160 1
mesam
mesam

மேஷம்- மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்துடன் செலவிடக் கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும். விநாயகரை வழிபடுங்கள்.

risapam

ரிஷபம் -ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டியது இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் பொறுப்புகளை ஏற்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடல் சோர்வு நீங்கும். பைரவரை வழிபடுங்கள்.

mithunam

மிதுனம்- மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகள் பலிதமாகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். அம்பிகையை துதியுங்கள்.

kadakam

கடகம்- கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத மாற்றங்கள் நிகழும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய யுக்திகளை கற்றுக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு எரிச்சலூட்டும் வகையில் இருக்கும். சிவ வழிபாடு செய்யுங்கள்.

சிம்மம்- சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த விஷயங்கள் நேர்மறையான பலன்களை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தனலாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். கிருஷ்ண வழிபாடு செய்யுங்கள்.

கன்னி- கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு சிறந்த பலன் கிடைக்கும் அமைப்பாக இருப்பதால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். அம்பிகை வழிபாடு செய்யுங்கள்.

thulam

துலாம்- துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சினைகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும். விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.

scorpio 08
scorpio 08

விருச்சிகம் -விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் திடீர் பண வரவு உண்டாகும். உத்தியோகத்தில் உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்களின் பிரச்சனை நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் மேலும் வலுவாகும். கடன் தீர பைரவரை வழிபடுங்கள்.

thanu

தனுசு- தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் சுயமாக எதையும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது அவசியமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய பலவீனம் எது என்பதை உணர்ந்து கொள்வீர்கள். சுயதொழிலில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் உண்டாகும். சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள்.

magaram

மகரம் -மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் தனலாபம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடு நீங்கும்.

kumpam

கும்பம்- கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவ ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய விடாமுயற்சிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்கும். விநாயகரை வழிபடுங்கள்.

meenam

மீனம் -மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி குதூகலத்துடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலையில் இருந்து முன்னேற்றம் காண கூடிய வாய்ப்புகள் உண்டு. ஈசனை வழிபடுங்கள்.