இன்று கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும் ராசிக்காரர் நீங்களா?

31
31
 • மேஷ ராசிக்காரர்களுக்கு தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பழைய கடன்பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் நம்பிக்கையை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
 • ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்தவேலைகள் முடியும். சிலர் உங்களைநம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.அலுவலகத்தில் மரியாதை கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
 • மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சின்ன சின்ன அவமானங்கள் மனக் கலக்கங்கள் வந்து போகும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். அதிக உரிமை எடுத்துக் கொண்டு யாரிடமும் பேசவும் பழகவும் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம்செலுத்துவதுநல்லது.எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.
 • கடக ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில்சகஊழியர்களுக்கு உதவுவீர்கள. அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.
 • சிம்ம ராசிக்காரர்களுக்கு அடுத்தவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதைச் செய்து முன்னேறுவோம் என்று முடிவுக்கு வருவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் சிலபுதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
 • கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.
 • துலாம் ராசிக்காரர்களுக்கு நீண்ட  நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண்செலவுகள் ஏற்படும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும்.  தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
 • விருச்சிக ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.
 • தனுசு ராசிக்காரர்களுக்கு கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
 • மகர ராசிக்காரர்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.  விழிப்புடன் இருக்க வேண்டிய நாள்.

 • கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் பிரச்சினைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.

 • மீன ராசிக்காரர்களுக்குகுடும்பத்தாரின் ஆதரவு பெருகும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.