இன்றையநாள்( 25டிசம்பர்) உங்களுக்கு எப்படி?

Up Country Lindhula Hospital 2 10
Up Country Lindhula Hospital 2 10

மேஷம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் முதலில் சந்தேகப்படுவதை நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்து போவது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்பாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்க போராட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனைவந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

ரிஷபம்

உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புக்கள் வரும். சகோதர வகையில்நன்மை உண்டு. மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

மிதுனம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில்சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கடகம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

சிம்மம்

திட்டமிட்ட காரியங்களை முடிக்க போராட வேண்டி இருக்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள் .

கன்னி

கன்னி: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு . வியாபாரத்தில் பழையவேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத் தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

துலாம்

இதுவரை கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும் மகிழ்ச்சி உண்டாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதியவரின் நட்பால்உற்சாகமடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள் . வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள் .

விருச்சிகம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும்தன்னைப் புரிந்துக்கொள்ள வில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில்வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.

தனுசு

கொஞ்சம் அலைச்சலும், சிறு சிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளி வட்டாரத்தில் நிதானம் அவசியம். அனாவசியசெலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத் தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் பணிகளை முடிக்க போராடு வீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மகரம்

உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வதால் முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் மூலம் இப்பொழுது உங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரரீதியாக சில முக்கியஸ் தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புகழ் கூடும் நாள்.

கும்பம்

கும்பம்: உணர்ச்சிப் பூர்வமாக செயல்படுவதை விட்டு விட்டு அறிவுப்பூர்வமாகப் பேசுவீர்கள். செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.

மீனம்

உடல் அசதி சோர்வு கோபம்யாவும் நீங்கி மனம் அமைதி பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சித் திரும்பும். எதிர்பார்த்த இடத்திலி ருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புதியபாதை தெரியும் நாள்.