நக சுத்தியை குணமாக்கும் எளிய வீட்டு வைத்தியம்!

1546848084 1822
1546848084 1822

நகம் என்பது அழகுக்காக மட்டுமல்ல. அது ஒரு அத்தியாவசிய உறுப்பு. நகச்சுத்தி வரும்போது நகத்தில் கட்டுப் போட்டுக்கொண்டு வீட்டுப் பூட்டைத் திறந்து பாருங்கள். அப்போது புரியும், நகத்தின் அருமை.

விரலுக்கு ஒரு கவசம்போல அமைந்துள்ள நகமானது ‘கரோட்டீன்’ எனும் புரதப்பொருளால் ஆனது. கண்ணில் பளிச்சென்று தெரிகிற, வழுவழுப்பான பகுதிதான் நகத்தின் உறுதியான பாகம்.

நம் வீட்டில் இருக்கும் சில சாதாரணப் பொருட்களைக் கொண்டே நக சுத்தியை எளிதில் குணப்படுத்த முடியும்.

கற்றாழை

மிக எளிதாக கிடைக்கக் கூடிய கற்றாழைக்கு நக சுத்தியை ஆற்றும் சக்தி உள்ளது. கற்றாழை சாறுடன் மஞ்சள் தூள் அரைத்து, விளக்கெண்ணைய் விட்டு சூட வைத்து, அதை நகத்தில் பூசினால் நகசுத்தி குணமாகும்.

விக்ஸ்

இது நக சுத்திக்கு ஒரு எளிய தீர்வாகும். பாதிக்கப்பட்ட நகத்தில் நன்றாகத் தேய்த்து, அப்படியே காற்றில் ஆற விட வேண்டும் அல்லது பாண்ட்-எய்டு கூட பயன்படுத்தலாம். காலை மற்றும் இரவு நேரங்களில் இச்சிகிச்சையை செய்யலாம்.

வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணெயை பாதிக்கப்பட்ட நகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நன்றாக மசாஜ் செய்து தேய்க்க வேண்டும். பூஞ்சைக்கு எதிரான பண்புகள் வேப்ப எண்ணெயில் மிகுந்து இருப்பதால் இதனால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

உப்பு நீர்

உப்பு நீரில் பாதிக்கப்பட்ட விரலை வைத்தாலும், நக சுத்தி சரியாகும். சாதாரண கல் உப்பை கரைத்து அந்த நீரையே இதற்கு பயன்படுத்தலாம். கடல் நீரில் கால் நனைத்தாலும் நக சுத்தி சரியாகும். பின்னர். காலைத் துடைத்து விட்டு அந்த இடத்தில் வினிகரை தடவ வேண்டும்.

சோடா உப்பு

சோடா உப்பு பசையை நக சுத்தி வந்த இடத்தில் தடவினால், அதில் உள்ள அலகலைன் பூஞ்சைகளை வளரவிடாமல் தடுத்து நக சுத்தியை குணமாக்குகிறது.

மஞ்சள்

மஞ்சளை விட மருத்துவம் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். நக சுத்திற்கு எளிமையான ஒரு மருத்துவம் என்னவென்றால், நீரில் மஞ்சளை கலந்து நகத்தில் தடவினால் போதும்.