வாயுத் தொல்லையைப் போக்கும் வேப்பம்பூப் பொடி!

5d6d8cf8b563e8188f9a21bc7e0bec19
5d6d8cf8b563e8188f9a21bc7e0bec19

தேவையான பொருட்கள் :

வேப்பம்பூ – 10 கிராம்

கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா 25 கிராம்

மிளகு, கொத்தவரை வத்தல் – தலா 20 கிராம்,
காய்ந்த மிளகாய் – 2

பெருங்காயத் தூள் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் கடாயில் நன்கு வறுத்து எடுத்து, கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.

இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம்.

நல்லெண்ணெய் சேர்த்து, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.