சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவலை அடுத்து திடீர் முடக்கம்!

153902 841379 corona one
153902 841379 corona one

சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவலை அடுத்து, திடீரென்று அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் மிகவும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே மக்கள் வெளியே செல்ல வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் அவசர நிலையால் 3.7 கோடி மக்கள் புதன்கிழமை முதல் தங்கள் குடியிருப்பிலேயே முடங்கி உள்ளனர்.

இதனிடையே சீனாவின் தலைநகர் பீஜிங் அருகே அமைந்துள்ள ஹுபே மாகாணத்தில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவிற்கு மத்தியில் மில்லியன் கணக்கில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மருந்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஹைலோங்ஜியாங் மாகாணத்தை பொறுத்தமட்டில் புதன்கிழமை மட்டும் 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 12 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய வந்துள்ளது. இதனால், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.