பருக்கள் மற்றும் தழும்புகள் மறைய குறிப்புகள் !

1520845784 2549
1520845784 2549

மருத்துவ செய்திகள் தினந்தோறும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி செய்வதால், தேவையற்ற சதைகள் குறைந்து, எடை குறைவதுடன், பருக்களால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.

வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் குளிர்ந்த நீர் கொண்டு, முகத்தை நன்கு கழுவி வாருங்கள். இது முகத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக்குவதுடன், படிந்துள்ள பக்டீரியாக்களையும் நீக்கும். முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள். ஒரே வகையான அழகு சாதனங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். முக்கியமாக எண்ணெய் சார்ந்த மேக் அப் சாதனங்களைத் தவிர்த்திடுங்கள்.

முகத்திலுள்ள பருக்களையும் தழும்புகளையும் நினைத்துக் கவலைபட்டுக் கொண்டு தொட்டுத் தொட்டு பார்க்காதீர்கள். அப்படிச் செய்தால், அவை பெருகும். அதோடு, நகம் பட்டு அவை செப்டிக் ஆகக்கூடும். எனவே பருக்கள் மீது விரல்களைக் கூடப் படவிடாதீர்கள். குறிப்பாக பருக்களை பிதுக்காதீர்கள்.

சிறிது சமையல் சோடாவை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிதுதண்ணீரை சேர்த்து பசைபோல கலந்து, இதனை முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் இருக்க விடுங்கள். பிறகு சற்று வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவிடுங்கள். இதனாலும் பருக்களும், தழும்புகளும் மறையக்கூடும்.