கோடை தாக்கத்தை தவிர்க்க குளிர் நீர் குடிக்கலாமா?

201604081039309067 Drinking ice water impacts on the body SECVPF
201604081039309067 Drinking ice water impacts on the body SECVPF

கோடை காலத்தில் மற்ற நாட்களை விட அதிகமாக தண்ணீர் குடிப்பது வழக்கம்.

பெரும்பாலான மக்கள் கோடை தாகத்தை தவிர்க்க குளிர் நீர் குடிப்பது வழக்கம். குளிர் நீர் குடித்தால் சற்று நேரத்திற்கு உடல் குளிர்ச்சி அடைந்த உணர்வு ஏற்படும். பின்னர் இயல்புநிலைக்குத் மாறிவிடும்.

குளிர் நீர் குடிப்பது ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஸ்க்ரீம்களால் சிலருக்கு பாதிப்பு ஏற்படலாம். ஐஸ்க்ரீம் சாப்பிடும் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லிவிட முடியாது. பல்சொத்தை, அலர்ஜி, தொண்டையில் பிரச்சனை உள்ளவர்கள் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் தொல்லை ஏற்படலாம்.

குளிர் நீர் குடிப்பதால் பிரச்சனை வராது. குளிர்ந்த நீரை அருந்துவதாலோ, குளிர்ந்த உணவுகளை உண்பதாலோ சளிக்குக் காரணமான வைரஸ் கிருமிகள் உருவாகாது.

மருத்துவ ரீதியாக குளிர் நீர் குடிப்பதால் பிரச்சனைகள் இல்லை. ஆனால் இன்றைய சூழலில் பெரும்பாலும் கடைகளில் விற்பனை செய்யப்படுவது சுத்தமில்லாத மாசு நீர். இதனை குளிராக வைப்பதால் சுத்தமில்லாத நீர் மேலும் சுத்தமற்றதாக இருக்கும். இதனால் குளிந்த நீர் சற்று பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.