வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சருமம் பொலிவு பெற

33333
33333

எந்த பக்கவிளைவுகளுமின்றி முகத்தை அழகாக மாற்ற வீட்டில் இருக்கும் இயற்கையான ஒரு சில பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது .

இயற்கையாக எளிய முறையில் சருமத்தை அழகாக்கும் வழிமுறைகள்

01.தலைமுடி மற்றும் முகம் இரண்டையும் அழகாக்க உதவுகிறது கடலைமா . கடலைமாவுடன் தயிர், மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி சிறிதுநேரம் கழித்து முகத்தைக் கழுவவும். முகம் பிரகாசமான பொலிவுடன் இருக்கும்.

02.சருமத்தில் காணப்படும் கரும்புள்ளிகளைப் போக்க தயிர் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது .தலைமுடிக்கும் தயிர் மிகச்சிறந்த ஊட்டச்சத்தாகும் . தலைமுடியை மிருதுவாக வைத்திருப்பதோடு பொடுகுத்தொல்லையில் இருந்தும் விடுதலை தரக்கூடியது .

03.எலுமிச்சையை சிறு துண்டாக வெட்டிக் கொண்டு அதை முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் நன்கு தேய்க்க வேண்டும். இது சருமத்துக்குப் பொலிவைத் தருவதோடு மட்டுமல்லாமல் சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் புதுப்பிக்கவும் செய்கிறது .

04.தேன் எல்லா வகையான சருமத்துக்கும் ஏற்றது. அதனால் தயிர், எலுமிச்சை , கடலைமா, தக்காளி, ஆகியவற்றுடன் தேனைச் சேர்த்து முகத்துக்குப் பயன்படுத்தலாம் இது முகத்தின் அழகை மெருகூட்ட பயன்படுகிறது .