தினமும் ஒரு அப்பிள் உண்பதன் நன்மைகள்!

8
8

அப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும். அப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச் செல்கள் அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.

அப்பிள் பழத்தின் தோலில் காணப்படும் மெழுகுத் தன்மை கொண்ட பளபளப்பும், அதனோடு இணைந்த இரசாயனமும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக் கூடியது என்று கூறப்படுகின்றது.

ஒரு நாளைக்கு ஒரு அப்பிளைச் சாப்பிடுவதால் மனிதனது சுகாதாரம் வியக்கத்தக்க ஆரோக்கியத்தைக் கொண்டிருக்கும்

அப்பிள்களில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் ஒரு பங்கு வகிக்கிறது. இதில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற கூறுகளும் உள்ளன. வைட்டமின் சி ஒரு வலுவான ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும், இது பற்கள், முடி, தோல் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு நன்மை பயக்கும்.

அப்பிள் சாப்பிடுவதன் நன்மைகள்

அல்சைமர் நோய்க்கு

அப்பிளில் குவெர்செட்டின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடெண்ட் அதிகம் உள்ளது. இது அல்சைமர் என்னும் மோசமான நரம்பு வியாதியைத் தடுப்பதில் வல்லது.

கொழுப்பை குறைக்க

அப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள அனைத்து கெட்ட கொலஸ்ட்ரால்கள் கரையும்.

சர்க்கரை நோய்க்கு

அதிகம் பழங்கள் சாப்பிட்டால் நீரிழிவு வந்து விடுமோ என்று பயப்படத் தேவையில்லை. ஆனால், தினமும் அப்பிள் சாப்பிட்டால் போதும். இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு கட்டுப்படுத்த உதவும்.

நரம்பு மண்டலத்தை பலப்படுத்த

அப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச் செல்கள் அழியாமல் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது.

நோயெதிர்ப்பு சக்தி பெற

அப்பிளில் உள்ள வைட்டமின்-சி, நமக்குத் தேவையான நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

கண் புரை வராமல் தடுக்க

அப்பிள் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், கண்களில் ஏற்படும் புரைகள் வராமல் பாதுகாக்கிறது.

நோய்களை குணப்படுத்த

அப்பிள் சாப்பிட்டால் கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து பூரணமாக குணமடைந்து விடும்.