நட்சத்திர பழம் உண்பதன் நன்மைகள்!

LLLL
LLLL

நட்சத்திர பழம் என்பது தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு வெப்பமண்டல பழ வகையாகும்.

இப்பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் ஏ,சி,இ, பி1, பி2 , பி3 , பி6 , ஃபோலேட்டுகள் போன்றவைகளும், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், இரும்பு சத்து, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்களும் அடங்கியுள்ளது.

மேலும் கார்போஹைட்ரேட், புரதச் சத்து, நார்ச்சத்து, நீர்சத்து, குறைந்த அளவு எரிசக்தி ஆகியவையும் காணப்படுகின்றன.

இந்த பழத்தினை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள்

01.நட்சத்திர பழம் வைட்டமின் சி உள்ளதால் இதனால் உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும அழற்சி போன்றவற்றை தடுக்கிறது.

  • 02.காய்ச்சல் மற்றும் ஜலதோஷங்களுக்கு எதிராக போராட இது உங்கள் உடலுக்கு உதவுகிறது. குளிர் காலங்களில் ஏற்படும் தொற்று நோய்க்கு எதிராக போராடுகிறது.
  • 03.எலும்புகள், தசைகள் மற்றும் குருத்தெலும்புகளில் காணப்படும் கொலாஜனை உருவாக்க உடலுக்கு வைட்டமின் சி அவசியம். மேலும் விட்டமின் சி தான் இரும்புச் சத்து உறிஞ்ச உதவுகிறது. எனவே உங்க விட்டமின் சி அளவை அதிகரிக்க நட்சத்திர பழத்தை சாப்பிட்டு வரலாம்.
  • 04.நட்சத்திர பழத்தில் சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. இது நம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இந்த தாதுக்கள் இதயத்துடிப்பை சமநிலையில் வைக்க உதவுகிறது.
  • 05.நட்சத்திர பழத்தில் கால்சியம் அடங்கியுள்ளதால் இதயத்திற்கு மிகவும் அவசியம். ஏனெனில் கால்சியம் சரியான அளவு இருந்தால் உங்களுக்கு இதய பிரச்சனைகளான பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வராது.
  • 06.நட்சத்திர பழம் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி நீர்ச்சத்தை சமநிலையில் வைக்கிறது. இதனால் இதயம் தொடர்பான நோய்கள் உங்களை அண்டாது.
  • 07.நீரிழிவு நோய் மற்றும் உயர் கொலஸ்ட்ராலை தடுக்கும். இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. சாப்பிட்ட பிறகு இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு உயர்வதை தடுக்கிறது. இது உங்கள் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
  • 08.நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை உட்கொள்வது நீரிழிவு நோயைத் தடுக்க உதவி செய்யும். எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் மட்டுமல்ல நீரிழிவு நோய் இல்லாதவர்கள் கூட இந்த பழத்தை சாப்பிட்டு வரலாம்.
  • 09.நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் கொழுப்பை குறைக்கிறது. எனவே இந்த பழத்தை சாப்பிடுவதால் உங்க கொழுப்பு அதிகரிக்காது உயர் கொழுப்புகள் குறையும்.
  • 10.சிறந்த செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்க இந்த நட்சத்திர பழம் உதவியாக இருக்கிறது.
  • 11.நட்சத்திர பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் நம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. நல்ல குடல் ஆரோக்கியத்தை கொடுக்கிறது ,. வயிற்று வீக்கம், தசைப்பிடிப்பு போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை களைகிறது.
  • 12.நட்சத்திர வடிவ பழத்தில் இரண்டு விதமான விட்டமின் பி சத்து உள்ளது. ரைபோஃப்ளேவின் மற்றும் ஃபோலேட் ஆகிய போலிக் அமிலம் ஆகும். இந்த இரண்டு விட்டமின்கள் தான் நம்முடைய வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. அதே மாதிரி ஹார்மோன்கள் மற்றும் என்சைம்கள் செயல்பாடு கட்டுக்குள் இருக்க உதவுகிறது.
  • 13.நட்சத்திர பழத்தில் உள்ள விட்டமின் பி மற்றும் சி நம்முடைய கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இது நம்முடைய கூந்தல் மற்றும் சரும செல்களை குணப்படுத்த உதவுகிறது. இதனால் நல்ல கூந்தல் வளர்ச்சி மற்றும் பளபளக்கும் சருமத்தை பெறுவீர்கள்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் இதை தவிர்க்க வேண்டும். காரணம் இந்த பழத்தில் நியூரோடாக்சின்கள் உள்ளன.

இந்த நியூடோடாக்சின்களை சிறுநீரக பாதிக்கப்பட்டவர்களால் உடம்பில் இருந்து வெளியேற்ற முடியாது. இதனால் கடுமையான பாதிப்பு உண்டாக வாய்ப்புள்ளது.