சற்று முன்
Home / விளையாட்டு / பாகிஸ்தானில் இருந்து அவுஸ்ரேலிய வீரர் ஓட்டம்

பாகிஸ்தானில் இருந்து அவுஸ்ரேலிய வீரர் ஓட்டம்

பாகிஸ்தானில் டி20 சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வரும் நிலையில், லாகூர் அணிக்காக ஆஸ்திரேலியாவின் கிறிஸ் லின் சதமடித்து தனது அணியை அரையிறுதிப் போட்டி வரை கொண்டு சென்றார்.

கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் மேலான லீக் போட்டிகள் முடிந்து விட்டன.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த சில தினங்களாக அனைத்து வெளிநாட்டு வீரர்களும் தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். மேலும், ரசிகர்களும் மைதானத்திற்கு வந்தபாடில்லை.

அதனால் போட்டிகள் அனைத்தும் மூடிய மைதானத்திற்குள் நடைபெற்று வந்தநிலையில், தற்போது அதுவும் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், அரையிறுதி போட்டி நடப்பதற்கு முன்னதாகவே கிறிஸ் லின் திடீரென பாகிஸ்தானில் இருந்து தனது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘கிரிக்கெட்டைவிட வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. துரதிருஷ்டவசமான இந்நிலையில் சொந்த நாடு திரும்ப முடிவு செய்துள்ளேன்.

பாகிஸ்தான் நீங்கள் ஒரு குண்டு வெடிப்புக்கு ஆளாகி உள்ளீர்” என்று அவர் இன்ஸ்டாகிராமில் எழுதினார். முன்னதாக, ஐந்து நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானை விட்டு வெளியேறிய இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ், கொரோனா அறிகுறி இருந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

உலகம் முழுவதும் இதேபோன்று கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விளையாட்டு போட்டிகளும் தடைபட்டுள்ளது. இந்தியாவில் நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடரும் கொரோனா பாதிப்பினால் தள்ளிபோயுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கொரோனாவால் பாதிப்பு அறிகுறி ‘தனிமை’ வீரர் விடுவிப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு சொந்த ...