இந்தியாவில் ஒரே நாளில் 3 இலட்சம் பேருக்கு கொரோனா!

112945135 97d7ade9 439b 46c1 9564 cc76319b8297
112945135 97d7ade9 439b 46c1 9564 cc76319b8297

இந்தியாவில் கடந்த 24 மணிநேரப் பகுதியில் சுமார் 3 இலட்சம் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அந் நாட்டு மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

அதன்படி இந்தியாவில் செவ்வாய்க்கிழமை 2,95,041 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 2,023 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட முதல் 10 மாநிலங்கள்:

மகாராஷ்டிரா – 62,097

உத்தரப் பிரதேஷ் – 29,574

டெல்லி – 28,395

கர்நாடகா – 21,794

கேரளா – 19,577

சத்தீஸ்கர் – 15,625

மத்திய பிரதேஷ் – 12,727

குஜராத் – 12,206

ராஜஸ்தான் – 12,201

தமிழ்நாடு – 10,986

இந்தியாவின் தற்போதைய கொவிட்-19 நிலவரம்:

மொத்த நோயாளர்கள் – 1,56,16,130

குணமடைந்தோர் – 1,32,76,039

உயிரிழப்புகள் – 1,82,553

சிகிச்சை பெறுவோர் – 21,57,538

தடுப்பூசி பெற்றுக் கொண்டோர் – 13,01,19,310