சிறப்பாக நடைபெற்ற பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார்சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு!

119820453 1716028371895804 5128501248706700083 o
119820453 1716028371895804 5128501248706700083 o

நோய்த்தொற்று காலத்தில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலும் தமது உயிரை பணயம் வைத்து செயலாற்றிய பொது சுகாதார பரிசோதகர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அடையாள ரீதியாக உத்தியோகபூர்வ மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

119462894 1716028431895798 6330770020672342599 o
119462894 1716028431895798 6330770020672342599 o

2015ஆம் ஆண்டு முதல் பொது சுகாதார பரிசோதகர் எவருக்கும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவில்லை.

சேவை காலத்தில் மோட்டார் சைக்கிள் கிடைக்காத, நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 26 சுகாதார வைத்திய பிரிவுகளில் சேவையாற்றுகின்ற 749 பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் முதன்மை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட மேலும் 56 பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கிவைப்பட்டன.

பொது சுகாதார பரிசோதகர்களை இணைத்துக்கொள்ளும்போது 02 வருட முழுமையான பயிற்சிநெறிக்கு உள்வாங்கப்படுவர்.

பயிற்சி காலத்தை நீடித்து பட்டமொன்றை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி பெற்றுத்தருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஷேட வைத்தியர் சஞ்சீவ முனசிங்ஹ, கொவிட் அவசர சிகிச்சைக்காக சுகாதார கட்டமைப்பை தயார்படுத்தும் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.