20ஆவது திருத்தம் பாராளுமன்றத்தின் ஊடாக மீண்டும் பரிசீலனை செய்யப்படும் – காணி விவகார அமைச்சர்

2 9
2 9

20 ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமரால் நியமிக்கப்பட்ட மீளாய்வு குழுவினர் பரிந்துரைத்த அறிக்கை மீண்டும் பாராளுமன்றத்தின் ஊடாக பரிசீலனை செய்யப்படும். இவ்விவகாரத்தினால் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் ஏற்படாது. சுமுகமான பேச்சு வார்த்தையின் ஊடாக கருத்து வேறுப்பாடுகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்ளப்படும் என காணி விவகார அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் மத்தியில் மாறுப்பட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. விமர்சனங்கள் இல்லாமல் ஒரு விடயத்தை செயற்படுத்தவது சாத்தியமற்றது. பல்வேறு தரப்பினர் பல தரபபட்ட விமர்சனங்களை இதுவரையில் முன்னைத்துள்ளார்கள்.

19 ஆவது திருத்தத்தினால் அரச நிர்வாகத்துக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் கடந்த அரசாங்கத்தை முழுமையாக பலவீனப்படுத்தியது.

20 ஆவது திருத்தத்தினால் அரசாங்கம் பலவீனமடைய கூடாது என்பதற்காகவே வர்த்தமானியில் வெளியாக ஏற்பாடுகள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன. பிரதமருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை பாராளுமன்றத்தின் ஊடாக பரிசீலனை செய்யப்படும்.

20 ஆவது திருத்தம் தொடர்பில் ஆளும் தரப்பிற்குள்ளும் கருத்து
வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையை கொண்டு எதிர் தரப்பினர் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். இவ்வாறான நிலைமைக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

இரு தரப்பினருக்கு இடையிலான கருத்து வேறுப்பாடுகள் சுமுகமான பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்க்கப்படும். எக்காரணிகளுக்காகவும் அரசாங்கம் பலவீனமடையாது. நாட்டு மக்கள் ஜனாதிபதி பிரதமர் மீது கொண்டுள்ள நம்பிக்கை பாதுகாக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .