இலஞ்சம் பெற முயன்ற வைத்தியசாலை ஊழியர் கைது!

Thiththikfkum isaffgi copy 1

அம்பாறை – அக்கரைப்பற்று அடிப்படை வைத்தியசாலை சிறு சேவை கட்டுப்பாட்டாளர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினரால் இன்று புதன்கிழமை (08) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே மருத்துவமனையில் விபத்து பிரிவில் பணிபுரியும் சுகாதார உதவியாளரிடம் இருந்து 15 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாக கோரி, 10 ஆயிரம் ரூபாயை பெற முயன்ற போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மருத்துவமனையின் வேறு பிரிவுக்கு இடமாற்றம் செய்து தருவதாக தெரிவித்தே இவ்வாறு இலஞ்சம் பெற முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.