தமிழ், தெலுங்கில் டப்பிங் பேசும் சல்மான்

i3 1
i3 1

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள படம் ‛தபாங் 3′. டிசம்பர் 20ல் திரைக்கு வரும் இப்படத்தில் கன்னட நடிகர் சுதீப் வில்லனாக நடித்துள்ளார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியிடுகிறார்கள்.

ஹிந்தியில் டப்பிங் பேசும் சல்மான் கான், அடுத்தபடியாக கன்னடத்திலும் டப்பிங் பேசப் போகிறாராம். கன்னட மொழியில் சரியாக பேசி விட்டால், தொடர்ந்து தமிழ், தெலுங்கிலும் டப்பிங் பேச முயற்சி எடுக்கப் போகிறாராம். அதோடு தென்னிந்தியா முழுவதிலும் படத்தின் புரொமோஷனில் பங்கேற்க இருக்கிறார்.