தமிழக அரசு அனுமதி வழங்கிய பிறகே அதிகாலை காட்சிகள்

1hg
1hg

பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கான அனுமதியை தமிழக அரசு வழங்கிய பின்னரே, அதிகாலை காட்சிகள் குறித்து முடிவு செய்யப்படும் என்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளிவரும் பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதியளிக்கக் கோரியும், நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக தொகைக்கு டிக்கெட் விற்பனை செய்யபடாது எனவும் எழுத்துமூலம் அளிக்க இருப்பதாக குறிப்பிட்டார்.