தங்க பிஸ் கெட்டுக்களுடன் பெண் கைது

67v
67v

இரண்டு கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களை வைத்திருந்த உக்ரைன் நாட்டு பெண் ஒருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

20 தங்க பிஸ்கட்டுக்களை தான் அணிந்திருந்த பாதணிக்குள் மறைத்து வைத்து வருகை தந்த போதே குறித்த பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

41 வயதுடைய உக்ரைன் நாட்டை சேர்ந்த குறித்த பெண்மணி இதற்கு முன்னரும் இரு தடவைகள் இதே போன்று இலங்கைக்கு வருகை தந்து சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த பெண் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.