பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

grade 1 school children Sri Lanka
grade 1 school children Sri Lanka

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து மூடப்பட்டிருந்த பாடசாலைகள் அனைத்தினதும் கற்றல் நடடிக்கைகள் மூன்று மாதங்களின் பின்னர் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது கட்டத்தின் கீழ் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழல் கடந்த வாரம் முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்திரானந்த தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் 5, 11 மற்றும் 13ஆம் வகுப்பு மாணவர்களின் கற்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

13ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்தர பரீட்சை எழுதவுள்ளனர். இதனால் காலை 7.30 மணி முதல் காலை 3.30 மணி வரை உயர்தர மாணவர்களுக்காக பாடசாலைகள் இயங்கும். 5ஆம் மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு வழமை போன்று காலை 7.30 முதல் 1.30 மணி வரை இயக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த காலத்தை நீடிக்க அவசியம் இருப்பின் அதற்கான அதிகாரம் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு மாணவர்கள் பருகுவதற்காக நீர்ப் போத்தல்கள் மற்றும் முகக் கவசம் வழங்குவதன் பொறுப்பு பெற்றோர்களுடையதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கற்கை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அனைத்து ஆசியரியர்களும் காலை 7.30 மணிக்கு பாடசலை வருவது கட்டாயமல்ல. அந்த ஆசிரியர்கள் கற்கவுள்ள காலப்பகுதிக்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் பாடசாலைகளுக்கு வர வேண்டும்.

10 ஆம் மற்றும் 12ஆம் வகுப்பிற்கு அடுத்த கட்டத்தின் கீழ் ஜுலை மாதம்20ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நான்காவது கட்டத்தி்ன கீழ் ஜுலை மாதம் 27ஆம் திகதி 3, 4, 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களு்ககு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.