இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி பூங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைப்பு!

19 1408429076 1 repower 5m wind turbine large
19 1408429076 1 repower 5m wind turbine large

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி பூங்காவினை இன்றைய தினம்(8) செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில் இன்று காலை 11 மணியளவில் இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி பூங்கா வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி நடுகுடா பகுதியில் குறித்த மின் உற்பத்தி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கே.திலீபன், வட மாகாண ஆளுநர் பி.ச.ம.சாள்ஸ், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டில், 141 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் குறித்த காற்றாலை மின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.