மாகாணசபை தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சி : எதிர்க்கட்சி குற்றச்சாட்டு!

2be9f14d6d8ad98a93ea14e7356ff4d6 XL 696x422 1
2be9f14d6d8ad98a93ea14e7356ff4d6 XL 696x422 1

மாகாணசபை தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,-

“தேர்தலுக்கு அஞ்சி அரசாங்கம் மாகாணசபை தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றன்றது. ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது.

கூட்டணி  விடயம் தொடர்பிலும் நாம்  கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம். ஆனால் ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் குறுகிய காலத்தில் தோல்வியமைந்துள்ளமை தற்போது தெளிவாகின்றது.

அதனாலேயே மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு அஞ்சுகின்றது.  தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப் பெற்றுள்ளதனால் ஜனநாயம் மீறப்படுகின்றது” என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.