யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுவரும் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு பலரும் ஆதரவை வழங்கியுள்ளனர்

VideoCapture 20210110 135434
VideoCapture 20210110 135434

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுவரும் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு பலரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.

VideoCapture 20210110 135443 1


யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடன், யாழ். இந்துக்கல்லூரியின் உயர்தர மாணவன் ஒருவரும், சமூக ஆர்வலர் ஒருவரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

VideoCapture 20210110 135533


தற்போது போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு தமிழ்  நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும்  பல்கலைக்கழக பழைய மாணவர்கள் என பலரும் வருகைதந்து ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VideoCapture 20210110 135427


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த 8 ஆம் திகதி இடித்தழிக்கப்பட்டுள்ளது.

VideoCapture 20210110 135424


இந்த செய்தியை அறிந்து மாணவர்களும், அரசியல் பிரதிநிதிகளும் மற்றும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதியில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருதனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் தற்போதய கொரோனா அச்ச நிலை காரணமாக கைவிடப்படுவதாகவும், சில மாணவர்கள் தொடர்ந்தும் உண்ணா நோன்பு போராட்டத்தை முன்னெடுப்பார்கள் எனவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றையதினம் அறிவித்தல் விடுத்திருந்தது.

VideoCapture 20210110 135424 1


இதனால் நேற்று பிற்பகலில் இருந்து மாணவர்கள் ஆரம்பித்துள்ள தீர்வு கிடைக்கும்வரை உண்வு தவிர்ப்பு போராட்டம் தற்போதுவரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.