இலங்கையில் 50 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை!

202007111228317170 Tamil News Coronavirus 64 Positive cases in Pondicherry SECVPF
202007111228317170 Tamil News Coronavirus 64 Positive cases in Pondicherry SECVPF

இன்றைய தினத்தில் நாட்டில் 687 கொரோனா தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50,229 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 43,267 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 247 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

6,715 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.