பொதுமக்கள் ஒன்று கூடி செயற்பட அனுமதி வழங்கப்படமாட்டாது – சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே

625.500.560.350.160.300.053.800.900.160.90 1 11
625.500.560.350.160.300.053.800.900.160.90 1 11

பொதுமக்கள் பெரும்பாலானோர் ஒன்று கூடி செயற்பட அனுமதி வழங் கப்படமாட்டாது என ஆரம்பச் சுகாதார சேவைகள், தொற்று நோய் மற்றும் கொவிட் தொற்று கட்டுப்பாட்டுத் தொடர் பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளனர்.

இந்நிலையில், புத்தாண்டு காலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதி முறைகளைப் பின்பற்றத் தவறும் பட்சத்தில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன எனவே சுகாதார வழிகாட்டிகளைக் கட்டாயம் பின்பற்றவேண்டும்.

கடந்த ஜனவரி மாதம் மக்கள் ஒன்று கூடியமையால் பெப்ரவரி மாதம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது என சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா தொற்று காரணமாக நடைமுயைில் உள்ள சுகாதார சட்டமுறையில் எதுவும் புத்தாண்டு காலங்களில் தளர்த்தப்படாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண் டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பொதுமக்கள் பெரும்பாலானோர் ஒன்று கூடி செயற்பட அனுமதி வழங்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.