கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்தை தாண்டியது

coronabusiness 1588833381344 1
coronabusiness 1588833381344 1

நாட்டில் மேலும் 211 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 93 ஆயிரத்து 128 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து701 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 2 ஆயிரத்து 856 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது இலங்கையில் கொரோனா தொற் றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது.